Saturday, May 4, 2024

“தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி” – அதிமுக கடும் அதிருப்தி!!

Must Read

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பாஜ தலைமையில் உள்ள கூட்டணி தான் வெற்றி பெரும் என்று தமிழக பாஜ துணை தலைவர் துரைசாமி கூறியிருப்பது அனைவர் மத்தியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சட்டமன்ற தேர்தல்:

வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது . அதற்கான அனைத்து செயல்பாடுகளிலும் எல்லா கட்சிகளும் இறங்கியுள்ளது. ஆளும் கட்சியான அதிமுகவில் பல குழப்பங்ககள் நடைபெற்று வருகிறது. யாரு முதல்வர் வேட்பாளர் என்று கட்சியில் இருப்பவர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

முதல்வர் சுற்றுப்பயணம் :

என்ன தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று கூறினாலும், கட்சினர் மத்தியில் அவர் தேர்தல் பணிக்காக கட்சியினர் மத்தியில் ஆலோசனை நடத்தவே சுற்று பயணம் மேற்கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

dmk and admk election
dmk and admk election

மேலும் அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் சசிகலா சிறையில் இருந்து வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் கட்சினர் அவர் சொல்வதை தான் கேட்பார்கள் என்றும் நம்பப்படுகிறது. இதனால் ஆளும் கட்சியை பொறுத்தவரை இன்னும் தெளிவான கருத்துடன் இல்லை என்பது தெரிகிறது.

பாஜ கூட்டணி கட்சி வெல்லும்:

இப்படியான நிலையில், நேற்று நிருபர்களிடம் பேசிய தமிழக பாஜ துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியதாவது,” தமிழகத்தில் தேர்தல் நிலை மாறி விட்டது. அதிமுக – திமுக என்ற நிலை மாறி பாஜ திமுக என்று நிலை உருவாகி உள்ளது.

bjp thuraisamy
bjp thuraisamy

இந்த தேர்தலில் பாஜ வுடன் எந்த கட்சி கூட்டணி அமைகிறது அந்த கட்சி தான் வெல்லும். பாஜ தலைமையில் தான் கூட்டணி அமையும். எந்த கட்சி பாஜவை அனுசரித்து செல்கிறதோ அந்த கட்சி தான் ஆட்சி அமைக்க முடியும்” இப்படியாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பதிலடி:

இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ” துரைசாமியின் கருத்தை பாஜ கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழக பாஜ கட்சி தலைவர் முருகன் தான். அவர் சொன்னால் நாங்கள் அதற்கு பதில் அளிப்போம் . பாஜ கட்சியில் கருத்து சுதந்திரம் உள்ளது.

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

admk jeyakumar
admk jeyakumar

அதனால் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். அப்படி தான் துரைசாமி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். தேர்தல் நெருங்கும் போது நாங்கள் கூட்டணி குறித்து அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுகவினர் அதிருப்தி:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் பாஜ கட்சின் சொல்படி தான் அதிமுக அரசை நடத்தி வருகிறது என்று எதிர் கட்சிகள் விமர்ச்சித்து வரும் நிலையில் இப்படி இந்த ரெண்டு கட்சிகளும் மோதி கொள்வது அனைவர் மத்தியிலும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உயிரிழப்பு?? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!!

மேலும், இப்படி பாஜ கட்சி சார்பில் கூறியிருப்பது அதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக மற்றும் பாஜ இந்த இரு காட்சிகள் தான் இணையும் என்று இருந்த நிலையில் துரைசாமி இப்படி அதிரடியாக கூறியிருப்பது இந்த தேர்தல் சமயத்தில் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.

- Advertisement -

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -