தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த திமுக எம்.எல்.ஏ. காலமானார்., அரசியல் கட்சியினர் இரங்கல்!!!

0
தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த திமுக எம்.எல்.ஏ. காலமானார்., அரசியல் கட்சியினர் இரங்கல்!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.-வும், திமுக செயலாளருமான புகழேந்தி (வயது 71), நேற்று (ஏப்.5) முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்ததால், உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி எம்.எல்.ஏ.புகழேந்தி காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன், இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்.., விரைவில் அமலுக்கு வரும் புது வசதி.., முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here