ரயில் பயணிகளுக்கு ஷாக்., கோவை வழி செல்லும் இந்த 8 ரயில்கள் ரத்து? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

0
ரயில் பயணிகளுக்கு ஷாக்., கோவை வழி செல்லும் இந்த 8 ரயில்கள் ரத்து? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

இந்தியாவில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு வழித்தடங்களிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் காசிபேட் to விஜயவாடா வழித்தடங்களில் தண்டவாளம், சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட தினங்களுக்கு 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

‘புஷ்பா 2’ படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழுவினர் அறிவிப்பு!!

அதன்படி,

  • எர்ணாகுளம் to நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில், ஏப்ரல் 27, மே 4, 18 ஆகிய தேதிகளிலும்,
  • நிஜாமுதீன் to எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 30, மே 7, 21 ஆகிய தேதிகளிலும்,
  • திருவனந்தபுரம் to நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயில், ஏப்ரல் 30, மே 7, 14, 21 ஆகிய தேதிகளிலும்,
  • நிஜாமுதீன் to திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், மே 3, 10, 17, 24 ஆகிய தேதிகளிலும்,
  • கொச்சுவேலி – இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், ஏப்ரல் 27, மே 4, 18 ஆகிய தேதிகளிலும்,
  • இந்தூர் – கொச்சுவேலி எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 29, மே 6, 20 ஆகிய தேதிகளிலும்,
  • கோர்பா – கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயில், மே 1, 4, 8, 11, 15, 18, 22 ஆகிய தேதிகளிலும்,
  • கொச்சுவேலி – கோர்பா எக்ஸ்பிரஸ், ஏப்ரல் 29, மே 2, 6, 9, 13, 16, 20 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here