முகூர்த்த மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0

சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி இருப்பவர்கள் பலரும் வார இறுதி நாட்களில், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் எளிதாக பயணம் மேற்கொள்ள சிறப்பு பேருந்துகளை TNSTC இயக்கி வருகிறது. அந்த வகையில் முகூர்த்த தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு நாளை (மே 3) முதல் 5ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரை, திருவண்ணாமலை, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கும், கோயம்பேட்டில் இருந்து பெங்களூர், நாகை உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்பு தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் ஞாயிறு இரவு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்புவதற்கு வசதியாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா? பயிற்சி இதுதான்? பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here