விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!!

0
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் தனது 62 வது படமான விடாமுயற்சியில் மிக விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிறது. இதில் ஹீரோயினாக நடிகை திரிஷா நடித்து வருகிறார்.
மேலும் இதில் சஞ்சய் தத், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருவதை நாம் அறிவோம். தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த மாதம் 1ம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இதை அஜித் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here