காஷ்மீர் பிரச்சினைக்கு ஜவஹர்லால் நேரு தான் காரணம்.., பா.ஜ.க. அண்ணாமலை குற்றச்சாட்டு!!

0

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவர் பேசுவது லேகியம் விற்பது போல் உள்ளதாக விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில், அதற்கு நான் லேகியம் தான் விக்கிறேன் அதை வாங்கி குடித்தால் குடும்ப ஆட்சி இருக்காது என மறைமுகமாக ஆளும் கட்சியை விமர்சித்து உள்ளார்.

இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது இவர் ஜவஹர்லால் நேரு குறித்து பேசிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சாதாரணமாக முடிந்திருக்க வேண்டிய காஷ்மீர் பிரச்சினையை, சிக்கல் நிறைந்ததாக மாற்றியவர் பண்டித் ஜவஹர்லால் நேரு என குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் கடந்த 1989 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், காவல்துறையை சேர்ந்தவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்திருப்பதாக கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here