Thursday, May 2, 2024

இனி 5 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம் – ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அசத்தல்!!

Must Read

கொரோனா வைரஸ் ஒருவருக்கு உள்ளதா?? இல்லையா?? என்பதை அறிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஐந்து நிமிடங்களில் தொற்று பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு:

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற நோய் தொற்று அனைத்து நாடுகளுக்கும் பரவியது. அதனால், அனைத்து நாட்டு அரசுகளும் முழு பொது முடக்கத்தை அமல்படுத்தியது. ஆனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 5 முதல் 6 மாதங்கள் ஆன நிலையில் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தினை சந்தித்தனர். ஒரு பக்கம் கொரோனவிற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இருந்தாலும், மக்கள் அன்றாட வாழ்வியல் சூழலுக்கு திரும்ப நினைத்தனர்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து நாட்டு அரசுகளும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அமல்படுத்தியது. இதன் காரணமாக நாளுக்கு நாள் கொரோனா பரவல் முன்பை விட அதிகரித்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியா விட்டாலும் கொரோனா உள்ளதா? என்பதை பரிசோதனை செய்து தெரிந்து கொள்வது மூலமாக பரவல் ஒருவரிடம் இருந்து பரவுவது தடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

அதனால், தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெறும் 5 நிமிடங்களில் கொரோனா தொற்றினை உறுதி செய்யக்கூடிய வகையில் ஒரு டெஸ்ட் கிட்டினை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியினை வீட்டில் கூட வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

எப்படி செயல்படுகிறது??

கூடுதலாக, மக்கள் அதிகமாக கூடும் விமான நிலையங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்தலாம். இதன் மூலமாக ஒருவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதனை எளிமையாக கண்டறிந்து அவரை தனிமைப்படுத்தி விடலாம். இதன் மூலமாக கொரோனா பரவல் குறைய வாய்ப்புகள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது. இந்த கருவி பல சிறப்பம்சங்களை கொண்டு உள்ளது.

ஆன்லைனில் துறை வாரியான தேர்வுகள் & 168 பணியிடங்களுக்கு முடிவுகள் வெளியீடு – TNPSC அறிவிப்பு!!

ஜீனோம் மாறுபாடு குறித்து இதில் ஆய்வு செய்யப்படுவதில்லை. அதற்கு மாறாக, டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படுகிறது. சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் நுண்ணோக்கி வழியாக பார்க்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது. இந்த கருவி கொண்டு கொரோனா வைரஸ் மட்டும் அல்லாமல் இன்ஃப்ளூயன்சா போன்ற வைரஸ்களை கண்டுபிடிக்கவும் பயன்படுகிறது. ஆராய்ச்சியாளர்களின் இந்த முயற்சி மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -