சென்னை அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

0
சென்னை அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!
IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் ஆடி முடித்துள்ளது. அடுத்து தனது 11வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளது. இதற்கு முந்தைய போட்டியில் அதே அணியுடன் ஆடி இருந்தது சென்னை அணி.
இந்த நிலையில் தர்மசாலாவில் நடக்க உள்ள இந்தப் போட்டி மே 5, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. CSK அணி இது வரை சென்னை சேப்பாக்கத்தில் 6 போட்டிகளில் ஆடி உள்ளது. அந்த 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது. அதே சமயம், மற்ற மைதானங்களில் 4 போட்டிகளில் ஆடி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. அந்த வகையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி மிகவும் அவசியம் ஆகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here