வாகன ஓட்டிகளே., நாள் ஒன்றுக்கு பெட்ரோல், டீசல் இவ்ளோ தான் லிமிட்? கட்டுப்பாடுகளை விதித்த திரிபுரா அரசு!!!

0

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு பணிகளுக்கும் இருசக்கர உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் அசாமில் ஜதிங்கா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் திரிபுராவுக்கு செல்லும் சரக்கு ரயில் இயக்கம் தடைபட்டுள்ளது. தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், இன்னும் ரயில் சேவை இயக்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திரிபுராவில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை சமாளிக்கும் விதமாக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை திரிபுரா அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி மறு உத்தரவு வரும் வரை இரு சக்கரம் மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஒரு நாளைக்கு ரூ.200 க்கும், 4 சக்கர வாகனங்கள் ரூ.500 க்கும், மினி பஸ் 40 லிட்டர் டீசல், பேருந்துகள் 60 லிட்டர் டீசல் என நாள் ஒன்றுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

நடிகை மாளவிகா மோகனனுக்கு திருமணம் எப்போது? அவரே கொடுத்த நச் பதில்.., ரசிகர்கள் ஷாக்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here