ஆன்லைனில் துறை வாரியான தேர்வுகள் & 168 பணியிடங்களுக்கு முடிவுகள் வெளியீடு – TNPSC அறிவிப்பு!!

0

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் வரும் காலங்களில் துறை வாரியான தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) முடிவு செய்துள்ளது. மேலும் சென்ற வருட ஜூன், நவம்பர் மாதங்களில் நடைபெற்ற பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

ஆன்லைனில் தேர்வுகள்:

கொரோனா வைரஸ் தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று உள்ளது. ஆன்லைனில் கல்வி, தேர்வு என தொழில்நுட்ப ரீதியாக மாணவர்கள் பயணிக்கத் தொடங்கி உள்ளனர். இதில் பல்வேறு நன்மைகள் உள்ளதால் வரும் காலங்களில் ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி அரசு பணிகளுக்கான தகுதித் தேர்வுகளையும் ஆன்லைன் வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் & பதவி உயர்வு போன்றவற்றிற்கு தகுதி ரீதியாக துறை தேர்வுகள் TNPSC மூலமாக நடத்தப்படுவது வழக்கம். அந்த தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் காலத்தில் எழுத்துத் தேர்வு நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் வரும் காலங்களிலும் இந்த முறையை பயன்படுத்த உள்ளதாக TNPSC அதிகாரிகள் கூறுகின்றனர்.

Online exams
Online exams

இதற்கான நிறுவன தேர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளில் தற்போது TNPSC இறங்கி உள்ளது. இதன் மூலம் கொரோனா பயமின்றி வீட்டில் இருந்தே தேர்வெழுதலாம் என்பதால் ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்ற ஆண்டு ஜூன், நவம்பர் மாதங்களில் TNPSC சார்பில் நடத்தப்பட்ட பொதுப்பணி துறை உதவி இயக்குனர் & குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (109 காலியிடங்கள்) மற்றும் மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் (59 காலியிடங்கள்) ஆகியவற்றிற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

பிரதமர் மோடி & உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு வெளியீடு!!

TNPSC அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் அடுத்ததாக சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட உள்ளனர். கொரோனா சிக்கன நடவடிக்கையாக அரசுப்பணிகளில் புதிய காலியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், ஏற்கனவே உள்ள காலி பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here