Monday, April 29, 2024

பிரதமர் மோடி & உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு வெளியீடு!!

Must Read

அரசியல் தலைவர்களின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.

சொத்து அறிக்கை:

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்துக்கள் பற்றிய விவரத்தை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது சொத்துக்களை பற்றி கூறும் போது அவருக்கு 2.49 கோடி என்று கூறினார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

pm modi
pm modi

இந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு 36 லட்சம் அதிகரித்து 2.80 கோடி என்று உள்ளது. 70 வயதாகும் அவருக்கு எந்த ஒரு கடனும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது, அதே போல், அவரிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் காப்பீடு போன்றவற்றின் மூலமாக பணத்தினை சேர்த்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அமித் ஷா சொத்து மதிப்பு:

அதே போல் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சொத்து முந்தைய ஆண்டினை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. 13 லட்சத்திற்கும் அதிகமான 10 அசையா சொத்துக்கள், ரொக்கமாக 15,814 ரூபாய், வங்கி இருப்பு மற்றும் காப்பீட்டு தொகையாக 1.04 கோடி இது போன்றவற்றை வைத்துள்ளார்.

பிக் பாஸை காப்பி அடிக்கும் ஜீ தமிழ் – உங்களுக்கு வேற வேலையே இல்லையா?? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

amith shah
amith shah

அவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட குறைந்ததற்கு காரணம் அவர் வைத்திருந்த மேற்கோள் பாத்திரங்களின் சந்தை மதிப்பு வீழ்ச்சி அடைத்தது ஆகும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -