ஐபிஎல் 2020: தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா பஞ்சாப்?? இன்று பெங்களூரு உடன் மோதல்!!

0

ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத அளவு வெற்றிகளை குவித்து வரும் விராட் கோஹ்லி தலைமயிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க காத்திருக்கிறது. ஆனால் மறுபுறம் தொடர் தோல்விகளில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் கேஎல் ராகுலின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உள்ளது.

பஞ்சாப் vs பெங்களூரு:

இந்த தொடரில் ஆடிய ஏழு போட்டிகளில் ஆறு போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது பஞ்சாப் அணி. ஆனால் ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், அதிக ரன்கள் அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் பஞ்சாப் அணி வீரர்களே டாப் இடஙக்ளில் உள்ளனர். அனைத்து போட்டிகளிலும் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அணிக்கு பேட்டிங்கில் அசுர பலம் அளிக்கின்றனர். ஆனால் ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே தொடர் தோல்விக்கு முக்கிய காரணம்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

செப்டம்பர் 24 அன்று நடந்த கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற பெங்களுரு அணி அதே உற்சாகத்துடன் களமிறங்க உள்ளது. இப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற உள்ளதால் சிக்சர் மழை பொழியும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். புள்ளிகள் அட்டவணையில் ஆர்.சி.பி மூன்றாவது இடத்தில் உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று டாப் 4 இடங்களை தக்கவைக்க பெங்களூரு முனைப்புடன் விளையாடும்.

உத்தேச 11 அணி:

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல் (c), மாயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன் (wk), க்ளென் மேக்ஸ்வெல் / ஜேம்ஸ் நீஷம், மந்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான், முகமது ஷமி, முருகன் அஸ்வின் / கே கவுதம், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: தேவதூத் படிக்கல், ஆரோன் பிஞ்ச், விராட் கோஹ்லி (c), ஏபி டிவில்லியர்ஸ் (wk), சிவம் டியூப், கிறிஸ் மோரிஸ், இசுரு உதனா, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here