பிக் பாஸை காப்பி அடிக்கும் ஜீ தமிழ் – உங்களுக்கு வேற வேலையே இல்லையா?? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0
zee-tamil-award-show
zee-tamil-award-show

ஜீ தமிழில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே புதிய நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளனர். இதற்கான ப்ரோமோவையும் வெளியிட்டுள்ளது ஜீ தமிழ். இதற்கு பலரும் விஜய் டீவியை பார்த்து ஜீ தமிழ் காப்பி அடிக்கிறது என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஜீ தமிழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் போலவே ஜீ தமிழ் ஒரு நிகழ்ச்சியை வெளியிட உள்ளது. அதாவது ஜீ தமிழில் உள்ள நடிகர் மற்றும் நடிகைகள் என 26 பேரை ஒரே வீட்டில் 3 நாட்கள் தங்க வைத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டை போன்றே ரூம்களும், சமயலறைகளும் உள்ளன.

zee-tamil-award-show
zee-tamil-award-show

இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது. அதில் விஷ்ணு மற்றும் ஆயிஷா சண்டை இடுவது போலவும் காட்டியது. மேலும் ராஜா மகள் சீரியலின் நாயகியுடன் விஷ்ணு கடலை போடும் ப்ரோமோவும் வெளியானது.

zee-tamil-award-show
zee-tamil-award-show

ஒரு தொலைக்காட்சி தனது டிஆர்பியை தக்கவைத்துக் கொள்ள பல சீரியல்கள், ரியாலிட்டி ஷோ என ஒளிபரப்பிக் கொண்டுள்ளது. அந்த வகையில் சன் டிவிக்கு அடுத்து விஜய் டிவியே டிஆர்பி.,யில் அதிகம் இருக்கும். சில நேரங்களில் ஜீ தமிழும் முந்தியுள்ளது. ஆனால் இது வரையிலும் ஜீ தமிழில் வெளியிட்ட ஷோ முக்கால்வாசி காப்பி அடுத்து தான் எடுக்கப்பட்டது.

இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சி வந்ததும் அதை போலவே 3 நாட்கள் என கூறி ப்ரோமோ வெளியிட்டுள்ளது. இதனை ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் என்றும் கூறுகின்றனர். இதற்கு பலரும் ஜீ தமிழை கழுவி ஊற்றி கமன்ட் செய்து வருகின்றனர். மேலும் இதனை பிக் பாஸ் லைட் என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here