Monday, April 29, 2024

‘முரளிதரனை விட மோசமான இன துரோகி’ – விஜய் சேதுபதியின் ‘800’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!!

Must Read

தமிழ் திரையுலக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ள “800” படத்திற்கு ட்விட்டரில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து பலரும் விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சர்ச்சைக்கு உள்ளாகும் “800” திரைப்படம்:

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர், நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஸ்ரீபதி என்ற இயக்குனர் இயக்கத்தில் ‘800’ என பெயரிடப்பட்ட படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை கதை ஆகும். அவர் கிரிக்கெட் துறையில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். ஆனால், இலங்கையில் இன படுகொலையின் போது இலங்கை அரசுக்கு ஆதரவாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அதனால், அவரது வாழ்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று கோரிக்கை வலுவாக எழுந்து வந்தது.

ட்விட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டில் உள்ளது. தற்போது பலரும் விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்துள்ளனர்.

“நாம் தமிழர்” கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் கூறியதாவது “முரளிதரன் வாழ்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முனைப்பு காட்டுவது அவரது திரை வாழ்க்கைக்கு நல்லது அல்ல. அவர் அந்த படத்தில் இருந்து விலக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கடுமையான எதிர்ப்புகள்:

அதே போல் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா அவருக்கு ஒரு கடிதத்தினை எழுதியுள்ளார். அதில், “நீங்கள் நடித்திருக்கும் “800” படத்தினை பற்றி கேள்விப்பட்டேன். அது முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை என்பதையும் அறிந்தேன். அவர் சிங்கள இனவாதத்தை முழுமையாக ஆதரித்தவர். விளையாட்டு துறையில் அவர் சாதித்து இருக்கலாம், ஆனால் அவரது சொந்த மக்கள் துன்பப்படும் போது சிரித்து கொண்டு இருப்பவர் துரோகம் புரிந்தவர் ஆவார்”

“இனத்துரோகம் செய்த ஒருவருடன் உங்கள் முகம் மக்களால் பார்க்கப்பட வேண்டுமா?? துரோகிகளை ஒரு போதும் தமிழ் இனம் மறக்காது. மன்னிக்காது. அதனால் அந்த படத்தில் இருந்து விலக முயற்சி செய்யுங்கள். அப்படி நீங்கள் செய்தால் எப்போதும் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

அதே போல் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாவது, “விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் நல்ல நடிகர். அவர் அறியாமை காரணமாக தான் இந்த “800” படத்தில் நடிக்க சம்மதித்து உள்ளார் என்று நினைக்கிறன். அவர் முரளிதரனை பற்றி அறிந்து தான் இந்த படத்தில் நடித்திருந்தால் அவர் முரளிதரனை விட மோசமான துரோகியாக பார்க்கப்படுவார். விஜய் சேதுபதியின் படைப்பு சுதந்திரத்தை மதிக்கிறேன். ஆனால், இப்படிபட்ட தேச துரோகியின் வாழ்கை படத்தில் அவர் நடித்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து” இவ்வாறாக அவர் தெரிவித்துள்ளார். “800” படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்ததில் இருந்து இது போன்ற கடுமையான விமர்சனங்கள் விஜய் சேதுபதியின் மேல் வைக்கப்பட்டு வருகின்றது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -