சென்னை to குருவாயூர் செல்லும் ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்., கூடுதலாக பெட்டி இணைப்பு? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

0

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா உள்ளிட்ட வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

TNPSC 1000 பொதுத்தமிழ் கேள்விகள்

அந்த வகையில், சென்னை எழும்பூர் to குருவாயூர் செல்லும் விரைவு ரயிலில், படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த வசதி நாளை (மே 18) முதல் மே 23ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அதேபோல் இன்று (மே 17) முதல் 21ஆம் தேதி வரை திருவனந்தபுரம் to மதுரை ரயிலில், கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here