Thursday, May 2, 2024

சபரிமலையில் தரிசனம் செய்ய இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு துவக்கம் – தேவஸ்தானம் அறிவிப்பு!!

Must Read

சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் இனி தரிசனம் செய்யலாம் என்று கேரளா அரசு அனுமதியளித்துள்ளது. தரிசனம் செய்வதற்காக ஆன்லைன் புக்கிங் இன்று முதல் துவங்க உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இனி வார நாட்களில் 2 ஆயிரம் பேரும் சனி மற்றும் ஞாயிறு அன்று 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்யலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை தரிசனம்:

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் கடந்த பல மாதங்களாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால் கோவில்கள், திரையரங்குகள் என்று எதுவும் திறக்கப்படாமல் இருந்தது. ஆனால், இரு மாதங்களுக்கு முன்பு தான் கோவில்கள் திறக்க அனுமதி அழைக்கப்பட்டது. அதுவும் பல வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளோடு திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சபரிமலையில் குறைந்தபட்ச பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் 2 ஆயிரம் பேரும் மகர விளக்கு விழாவிற்கு 5 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கூடுதலான பக்தர்களை கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் போர்டு கேரள அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கூடுதல் பக்கதர்களை கோவிலுக்குள் அனுமதிக்க தற்போது அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி – தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு!!

அதன்படி, இனி வார நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரை 2 ஆயிரம் பேரும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்ய கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. தரிசனம் மேற்கொள்ள ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!

ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -