ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி – தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு!!

0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி தலைநகர் கான்பெர்ராவில் இன்று தொடங்கி உள்ளது. இதில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இத்தொடரை ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றி விட்ட நிலையில் இந்திய அணியில் பல புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஒருநாள் தொடர்:

ஐபிஎல் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்ற இந்திய அணி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் ஏற்கனவே நடைபெற்ற இரு ஒருநாள் போட்டிகளிலும் பவுலர்கள் சொதப்பியதால் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றி உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர பவுலர்கள் பும்ராஹ், ஷமி ஆகியோர் ரன்களை வாரி வழங்கி ஏமாற்றம் அளித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் 3வது ஒருநாள் போட்டியில் ஆவது வெற்றி பெற வேண்டிய முனைப்பில் இந்திய அணி களமிறங்கி உள்ளது. இப்போட்டியில் தமிழக வீரர் யார்கர் புகழ் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவர் பங்குபெறும் முதல் சர்வதேச போட்டி இது என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஐபிஎல் போட்டியில் 71 யார்கர்கள் வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடராஜன் கேப்டன் விராட் கோஹ்லியிடம் இருந்து இந்திய அணி தொப்பியை பெற்றுக் கொண்டார்.

இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்த முடிவெடுத்துள்ளார். இதனையடுத்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான், சுப்மண் கில் களமிறங்கி உள்ளனர்.

விளையாடும் 11 அணி:

இந்தியா – ஷிகர் தவான், சுப்மான் கில், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, டி நடராஜன்

ஆஸ்திரேலியா – ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி (wk), கேமரூன் கிரீன், ஆஷ்டன் அகர், சீன் அபோட், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here