திருப்பதி செல்லும் பக்தர்களே., 2024 ஜூன் மாதத்திற்கான முன்பதிவு., இந்த தேதியில் தான்? தேவஸ்தானம் அறிவிப்பு!!!

0
திருப்பதி செல்லும் பக்தர்களே., 2024 ஜூன் மாதத்திற்கான முன்பதிவு., இந்த தேதியில் தான்? தேவஸ்தானம் அறிவிப்பு!!!

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அனுதினமும் சுமார் 70,000 பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் கூட்ட நெரிசலில் அவதியுறாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான முன்பதிவு டிக்கெட் விநியோகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி 2024 ஜூன் மாதத்திற்கான,

  • லக்கி டிப் முன்பதிவு வருகிற மார்ச் 18 முதல் 20 ஆம் தேதி வரை திறந்திருக்கும்.
  • கல்யாணோத்சவம், திருமலை ஆர்ஜித சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ரதிபாலங்கர சேவை ஆகிய முன்பதிவு டிக்கெட்டுகள், வரும் 21 ஆம் தேதி காலை 10 மணி விநியோகம் செய்யப்பட உள்ளது.
  • ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் ஜூன் மாத விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் மார்ச் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
  • ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், மார்ச் 25ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அன்று மாலை 3 மணியளவில் திருமலை மற்றும் திருப்பதியில் விடுதிக்கான முன்பதிவு டிக்கெட் வெளியிடப்படவுள்ளது.
  • மேற்கண்ட சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை பெற https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இனி இவர்களுக்கு மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.., வெளியான முக்கிய அறிவிப்பு !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here