இல்லத்தரசிகளே.., சன் டிவி சீரியல்களில் வந்த அதிரடி மாற்றம்.., இனி இப்படித்தான் ஒளிபரப்பாகும்!!!

0
சன் டிவியில் இல்லத்தரசிகளை கவர்வதற்காக ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் குறிப்பாக எதிர்நீச்சல், இனியா, சிங்கப்பெண்ணே போன்ற சீரியல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சீரியல்களுக்கு போட்டியாக லட்சுமி என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் ஹீரோவாக சஞ்சீவ் நடிக்க உள்ளார். மேலும் தென்றல், ஆபீஸ், அழகு, தாலாட்டு  போன்ற சீரியல்களில் நடித்த ஸ்ருதியும் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த சீரியல் புதிதாக வர உள்ளதால் ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த சீரியல்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி வரும் நாட்களில் மதியம் 11 மணிக்கு மீனா சீரியலும், 12 மணிக்கு அருவி சீரியலும், 2.30 லட்சுமி தொடரும் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here