Protein Powder- ஆல் உடலுக்கு ஆபத்து.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை!!

0

இந்தியாவில் பெரும்பாலான இளைஞர்கள் தங்களது உடலை வலுவாக்குவதற்காக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் ஒரு சிலர் புரோட்டின் பவுடர்கள் வழியே உடல் எடையை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் இந்திய அளவில் பிரபலமான 36 புரோடின் சப்ளிமெண்டுகள் 70 சதவீதம் தவறான புரதத் தகவல்களைக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.

IRE vs PAK 1st T20: மீண்டும் சொதப்பிய பாகிஸ்தான்.. வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து!!

தற்போது இந்த செய்தி தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது உடல் வளர்ச்சிக்காக உட்கொள்ளப்படும் புரதச்சத்து பொடிகளை (Protein Powder) அதிகம் சாப்பிட்டால் எலும்புதாது இழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற ஆபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உணவில் அதிக அளவில் உப்பு சேர்ப்பது, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here