பாரதியை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க அழைக்கும் கண்ணம்மா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் கண்ணம்மா பாரதியை DNA டெஸ்ட் எடுக்க அழைக்கிறார். பாரதி டெஸ்ட் எடுக்க ஒத்துக்கொள்வாரா?? என்பதே இன்றைய எபிசோடாக உள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா வேலை விஷயமாக ஹைதராபாத் கிளம்புகிறார். அப்பொழுது பாரதி அங்கு வர வேறு அவரிடம் குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்கிறார். இதனால் பாரதிக்கு குற்ற உணர்ச்சியாக ஆகிறது. சரி என்று கிளம்பி போக அப்பொழுது ஹாஸ்பிடலில் இருந்து பாரதிக்கு கால் வருகிறது. கண்ணம்மா பாரதியின் மனைவி என்று கூறியதை சொல்கின்றனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் கோவமடையும் பாரதி ஹாஸ்பிடலுக்கு செல்கிறார். அங்கு கண்ணம்மாவிடம் கோவமும் அடைகிறார். மேலும் கண்ணம்மா அது உன் குழந்தை தான் என்று எடுத்து சொல்கிறார். ஆனால் பாரதி கேட்பதாக இல்லை. அப்பொழுது டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போகலாம் என்று அழைக்கிறார்.

ஆனால் பாரதி வருவதாக இல்லை. அப்போ என்ன பண்ணா நம்புவீங்க என்று கேட்க எதையும் காதில் வாங்காமல் செல்கிறார் பாரதி. நேராக வெண்பாவின் வீட்டிற்கு செல்ல அங்கு வெண்பா இல்லாததை பார்த்து வீட்டின் உள்ளே செல்கிறார் பாரதி. எதோ சத்தம் கேட்டு ரூம் உள்ளே வர வெண்பாவின் சித்தப்பா படுத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

பக்கத்தில் சென்று பார்க்க போதை பொருள் இருப்பதை பார்த்து குழப்பத்தில் உள்ளார். அப்பொழுது அங்கு வெண்பா வரவே பாரதி கண்டு பிடித்து விடுவானோ என்று அதிர்ச்சியடைகிறார். அப்பொழுது பாரதி வெண்பாவிடம் விவரத்தை கேட்க தன் சித்தப்பா போதைக்கு அடிமையானதாகவும் அது கிடைக்கவில்லை என்றால் பக்கத்தில் இருப்பதை வைத்து அடிப்பதாகவும் பல பொய்களை கூறுகிறார் வெண்பா.

அவரது சித்தப்பா வெண்பா பற்றி எதோ கூறுவர அப்பொழுது மறுபடியும் போதை மருந்து ஊசியை போடுகிறார் வெண்பா. இதனால் பாரதிக்கும் குழப்பமாகிறது. வெண்பாவிற்கு இனிமேல் தன் சித்தப்பாவை மறைத்து வைக்க முடியாது என்ற சந்தோசம் வேறு. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here