ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் குவிப்பு – சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி!!

0

ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ரா மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி 12 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

விராட் கோஹ்லி:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோஹ்லி 12000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். விராட் கோஹ்லி தனது 242 வது இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது 300 வது ஒருநாள் இன்னிங்சில் 12000 ரன்களை கடந்தார். ஆனால் விராட் கோஹ்லி தனது 250 இன்னிங்ஸ்களுக்குள் 12,000 ரன்களை தாண்டி உள்ளார். தற்போது ஒருநாள் போட்டிகளில் விராட் கோஹ்லி சராசரியாக 60 ரன்களை விளாசியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒருநாள் தொடரில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்கார, சனத் ஜெயசூரியா, மகேலா ஜெயவர்தன ஆகியோருக்குப் பிறகு 12 ஆயிரம் ரன்களை கடந்த 6வது வீரராக விராட் கோஹ்லி மாறியுள்ளார். விராட் கோஹ்லி இதுவரை 43 ஒருநாள் சதங்கள் விலகியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் அடித்த 51 சதங்களின் சாதனையை விரைவில் முறியடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 33 ஓவர்கள் முடிவில் 155 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here