திருப்பதி செல்லும் பக்தர்களே.., 3 நாட்களுக்கு இந்த தரிசனம் ரத்து.., தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு!!!

0
திருப்பதி செல்லும் பக்தர்களே.., 3 நாட்களுக்கு இந்த தரிசனம் ரத்து.., தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு!!!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருமலை கோவில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வரும் வெள்ளிக்கிழமை 16ஆம் தேதி ரச சப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஏழுமலையான் ஏழு வாகனங்களில் 4 மாட வீதிகளில் வலம் வருவார்.
இதனால் திருமலை கோவிலே விழாக்கோலம் பூண்டிருக்கும். இதை கருத்தில் கொண்டு பிப்ரவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் சர்வதர்ஷன் டைம் ஸ்லாட் டோக்கன்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் VIP பிரேக் தரிசனம், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசனங்கள் ஆகியவையும் ரத்து செய்யப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here