Thursday, May 2, 2024

அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Must Read

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதனால் வரும் 25 ஆம் தேதி காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் அருகே “நிவர்” புயல் கரையை கடக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை:

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைத்துள்ளது. இது அடுத்து 24 மணி நேரத்தில் புயலாக உருவாகி வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25 ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மஹாபலிபுரம் பகுதியினை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

புயலால் 15 கிமீ வேகத்தில் காற்று வேகத்தில் வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் சென்னை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான கனமழை பெய்யும். பின், அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள வடமாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை பகுதியில் 2 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.

மீன்வர்களுக்கான எச்சரிக்கை:

  • நவம்பர் 23 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்று கூறப்பட்டுள்ளது.
  • நவம்பர் 24 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இதனால் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

வடிவேலுக்கு அடித்த துரதிர்ஷ்ட லாட்டரி.., கடைசில நிலைமை இப்படி ஆகிடுச்சே.., ஷாக்கிங் நியூஸ்!!

காமெடி கலைஞராக மக்கள் மனதில் தற்போது வரை நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் வடிவேலு. இவருக்கும் இயக்குனர் சங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -