தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சிறப்பு ஏற்பாடு., பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை!!!

0

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிகளில் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக புகார் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், தூய்மை பணிகளை மேற்கொள்ள போதிய ஊழியர்கள் இல்லை என கூறியுள்ளனர்.

தமிழக இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதித் தேர்வு ரத்து? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!

இதையடுத்து அவுட்சோர்சிங் முறையில் தூய்மை பணிகளை மேற்கொள்ள 1,954 ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்க இருப்பதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் உள்கட்டமைப்பு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம், புது வண்ணம் பூசுவது தொடர்பான பணிகளை பள்ளி ஊழியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். கல்வித்துறையின் இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here