பிரபல பின்னணிப் பாடகி திடீர் மறைவு., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

0
தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் உமா ரமணன். இவர் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தில்  இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடலின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். இந்நிலையில் இவர் சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ஒரு சோகமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது உமா ரமணன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here