வனிதாவை வழக்கம் போல அசிங்கப்படுத்திய அருண் விஜய் – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

0

வனிதா விஜயகுமாரின் பிரச்சனைகள் தான் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகிறது. இதுவரையில் அவரது குடும்பம் எதையும் கண்டுகொள்ளாத நிலையில் தனது அண்ணன் அருண் விஜய் பிறந்தநாளுக்கு வனிதா, அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமார்

வனிதா குடும்பத்துடன் ஏற்பட்ட பிளவு நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. வனிதாவின் அப்பாவான விஜயகுமார் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். வனிதாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து உள்ளனர். மேலும் வனிதா ஏற்கனவே குடும்பத்தை எதிர்த்து 2வது திருமணம் செய்ததற்கே அவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதையும் தாண்டி மூன்றாவதாக பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் அதற்கு விஜயகுமார் குடும்பத்தின் தரப்பில் இருந்து எந்த ஒரு கருத்துக்களையும் வெளியிடவில்லை. மேலும் வனிதா பீட்டர் பால் பிரேக்கப் அதை விட பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதிலும் அவர்கள் குடும்பம் வாய்திறக்கவே இல்லை.

மேலும் விஜயகுமாருக்கு சமீபத்தில் கூட உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு கூட வனிதாவை அனுமதிக்கவில்லை. நவம்பர் 19 அன்று அருண் விஜயின் பிறந்த நாளை ஒரு ஆதரவற்ற குழந்தைகளின் ஆசிரமித்திற்கு சென்று கொண்டாடியுள்ளனர். அதனை தன் வலைப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அருண் விஜய்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அண்ணனின் பிறந்த நாளையொட்டி வனிதா இந்த வருடமும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தார். தனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்த அருண் விஜய் வனிதாவை கண்டுகொள்ளவே இல்லை. இதனை ரசிகர்கள் பலரும் குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் இப்படி அசிங்கப்படுத்த வேண்டாமே என்று வனிதாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here