முதன்முறையாக தனது திருமண புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு பட நாயகி – இணையத்தில் வைரல்!!

0

தமிழில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் சனா கான். ஏற்கனவே இவருக்கு ரகசிய திருமணம் நடந்த நிலையில் முதன்முதலாக தன் கணவருடன் திருமணத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சனா கான்

மாடலிங் துறையின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் சனா கான். இவர் ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் தான் நடித்து வந்தாராம். அதன் பிறகு தான் அவருக்கு பல மொழிகளில் வாய்ப்பு கிடைத்தது. மேலும் பல விளம்பர படங்களில் நடித்திருந்தார். மேலும் டான்சில் அதிக ஆர்வம் உள்ள சனா கான் சில படங்களில் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என பல மொழிகளில் கலக்கி வருகிறார் என்றே சொல்லலாம். தமிழில் சிலம்பாட்டம் படத்தில் ஐயர் வீட்டு பெண்ணாக தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.

மேலும் அந்த படத்தின் அவர் ஆடிய அனைத்து பாடல்களும் டாப் ஹிட். விஷால் நடித்த அயோக்யா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். பயணம் திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு மும்பையை சேர்ந்த பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து வந்தார்.

நாளடைவில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படவே இருவரும் பிரிந்தனர். அவர் தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் கூறி வந்தார். இது சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை கிளப்பி வந்தது. மேலும் அவர் 2012 இல் ஹிந்தி பிக் பாஸில் கலந்துகொண்டார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதில் அவரை அனைவர்க்கும் பிடித்து போகவே ஹிந்தி துறையில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் சில காலமாக சினிமாவை விட்டு விலகப் போவதாக கூறி வந்தார். கடவுளுக்கு தொண்டு செய்யப்போவதாகவும் கூறி வந்தார். அதன் பிறகு அவர் சூரத்தை சேர்ந்த முக்தி அனாஸ் என்ற தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.

அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதன் பிறகு தற்போது முதன் முறையாக தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சனா கான். அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here