தமிழகத்தில் ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல் எச்சரிக்கை., இந்த அறிகுறிகள் இருக்கா? சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

0

கடந்த சில தினங்களாக கேரளாவின் கோழிக்கோடு, திருச்சூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. க்யூலக்ஸ் வகை கொசுக்களால் பரவக் கூடிய இந்நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கேரளாவை ஒட்டிய தமிழக எல்லைகளில் பல்வேறு முன்னேற்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

அந்த வகையில் தற்போது “‘வெஸ்ட் நைல்’ வைரஸ் தாக்கியவர்களுக்கு தலைவலி, வாந்தி, காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்படும். ஒரு சிலருக்கு கழுத்து விரைப்பு, மயக்கம், அதிக காய்ச்சல், பலவீனம், கோமா, மூளைக் காய்ச்சல், பக்கவாதம் போன்றவை அறிகுறிகளாக இருக்கும். இந்த அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், உடனடியாக மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.” என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here