என்  வாழ்க்கையில  ஒரு பொண்ணு வந்துட்டா.., யாரு தெரியுமா?? அதிகாரபூர்வமாக அறிவித்த பிரபாஸ்!! 

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகனாக கலக்கி வருபவர் தான் நடிகர் பிரபாஸ். எக்கச்சக்க ஹிட் படங்களை கொடுத்து பல விருதுகளையும் கைப்பற்றியுள்ளார். பாகுபலி  திரைப்படம் இவருக்கு  தமிழ்நாட்டிலும்  நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இவரும் அனுஷ்காவும் காதலித்து வருவதாக செய்திகள்  பரவி இருந்தாலும் அது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும்  வெளியாகவில்லை.

ரசிகர்களுக்கு  இவர்கள்  திருமணம் செய்தால் திரையுலக சிறந்த ஜோடிகளில் இவர்களும் இணைந்து விடுவார்களே என்ற எண்ணம்  தான். ஆனால் திருமணம் குறித்து இருவரும் நீண்ட காலமாக எந்த செய்தியையும் வெளியிடவில்லை. ஆனால்  சமீபத்தில் அனுஷ்காவிற்கு திருமணம் என்ற செய்தி பரவி வந்தது. இந்நிலையில்  பிரபாஸ்  தனது சமூக  வலைதள பக்கத்தில்  தனது வாழ்க்கையில்  ஒரு பெண் வந்து விட்டாள்  என்றும் காத்திருங்கள்  என்றும்  குறிப்பிட்டுள்ளார். இதனால்  ரசிகர்கள்  ஏக  குஷியில்  உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here