குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு., 16 வயது சிறுவன் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

0
குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு., 16 வயது சிறுவன் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கி இருப்பதால், எதிர்பாராதவிதமாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தமிழக சுற்றுலா பயணிகளே., அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு வராதீர்கள்? மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!

இதனால் தென்காசி மாவட்ட பழைய குற்றால அருவியில் குளிப்பதற்காக வந்த 16 வயது சிறுவன் அஸ்வின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். விவரம் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சிறுவனை தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here