உங்கள் ஜாதகப்படி அரசு வேலையா? தனியார் வேலையா? எது அமையும்??

0

இன்று பலருக்கு குழப்பமாக இருப்பது நமக்கு அரசு வேலை கிடைக்குமா? தனியார் வேலை கிடைக்குமா? என்பதுதான். ஒருவருக்கு என்ன வேலை கிடைக்கும் என்பது அவரது பிறந்த ஜாதகத்தை வைத்தே கணக்கிடப்படுகிறது. சிலர் அரசு வேலைக்கு செல்வதற்கான அனைத்து திறமையும், தகுதிகளும் உள்ளவர்களாக இருந்தாலும் அரசு வேலை கிடைப்பதில்லை. இதற்கு காரணம் அவரது ஜாதக அமைப்பாகும்.

அரசு வேலையா? தனியார் வேலையா?

லக்கினத்தில் உள்ள 8-ம் அதிபதியையும், 10-ம் அதிபதியையும் வைத்து ஒருவருக்கு அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் வேலை கிடைக்குமா என்று கணிக்கப்படுகிறது. சனி பகவான் புதன் வீட்டிலோ, புதன் சனி வீட்டிலோ இருந்தால் அரசு வேலை கிடைக்காது. அதையும் மீறி கிடைத்தால் கடைசி வரை அரசு வேலை நிலைக்காது என்று கூறப்படுகிறது. இது போன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு இராணுவ பணிக்கு செல்ல யோகம் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குறிப்பாக, சனி வீட்டில் புதன் இருந்தாலும், புதன் வீட்டில் சனி இருந்தாலும் ராகு திசை வருவதற்கு முன்னர் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் கடைசிவரை வேலை பார்க்கலாம். அரசு துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அவ்வாறு தானாக ஓய்வு பெறவில்லை என்றால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். கேது தசை, சுக்கர தசை உள்ள ஜாதகர்கள் ராகு தசை வருவதற்கு முன்பே அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

லக்கினத்திற்கு 10-ம் இடத்தில் செவ்வாய் வீடாக இருந்தாலும், செவ்வாய் இருந்தாலும் மருத்துவ துறைக்கு செல்ல அமைப்புள்ளது. 12-ம் இடத்தில் சந்திரன் வீடாக இருந்தாலும், சந்திரன் அல்லது ராகு இருந்தாலும் மத்திய அரசு அல்லது வெளிநாடு வேலைக்கு செல்லும் யோகம் வரும். பத்தாம் வீட்டில் புதன் அல்லது சுக்கிரன் இருந்தால் ஆசிரியர் பணி அல்லது பல்கலைக்கழக வேலைக்கு செல்வார்கள். இவ்வாறு நம் ஜாதக அமைப்பை வைத்தே நமக்கு அரசு வேலையா, தனியார் வேலையா என்பது கணக்கிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here