ஊரே மணக்கும் சிக்கன் கிரேவி., இந்த மாதிரி மட்டும் செஞ்சு பாருங்க., அம்புட்டு ருசியா இருக்கும்!!

0
ஊரே மணக்கும் சிக்கன் கிரேவி., இந்த மாதிரி மட்டும் செஞ்சு பாருங்க., அம்புட்டு ருசியா இருக்கும்!!
ஊரே மணக்கும் சிக்கன் கிரேவி., இந்த மாதிரி மட்டும் செஞ்சு பாருங்க., அம்புட்டு ருசியா இருக்கும்!!

பொதுவாக சண்டே என்றாலே நான்வெஜ் சாப்பிட்டால் தான் அந்த நாள் முழுமை அடையும் என்பது நம்மில் பலரின் எண்ணமாக இருக்கிறது. அப்படி அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கனை வைத்து ஒரு 10 நிமிடத்தில் சூப்பரான ரெசிபி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

Enewz Tamil WhatsApp Channel 

தேவையான பொருட்கள்;

  • சிக்கன் 1/2 கிலோ
  • சின்ன வெங்காயம் – 20
  • பூண்டு – 15
  • வரமிளகாய் – 5
  • இஞ்சி – 5
  • கொத்துமல்லி தழை – 1 கைப்பிடி
  • உப்பு – தேவையான அளவு
  • தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • புதினா இலைகள் – சிறிதளவு

செய்முறை விளக்கம்;

இந்த சிக்கன் கிரேவி சமைப்பதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து கொள்ளவும். அதில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, வரமிளகாய், கொத்தமல்லி இலைகள் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்னர் வாங்கி வைத்திருக்கும் சிக்கனை சுத்தமாக கழுவி, அதில் அரைத்து வைத்துள்ள இந்த பேஸ் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு 15 நிமிடம் ஊற விடவும்.

ரேஷன் கார்டு அட்டைதாரர்களே…, இதுக்கு APPLY பண்ண இதான் டைம்…, அறிவிப்பை வெளியிட்ட கேரளா!!

அதன் பின்னர் கடாயை எடுத்து அடுப்பில் வைத்து 3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பிறகு அதில் சிறிதளவு புதினா & கறிவேப்பிலைகளை போடவும். பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கிளறி விடவும். பின் அதில் மசாலாவில் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு நன்றாக கிளறி விடவும். ஒரு 10 நிமிடங்களுக்கு பின் அதில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை போட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்போது நமக்கு சுவையான சிக்கன் கிரேவி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here