Friday, May 3, 2024

இன்று முதல் “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” திட்டம் அமல் – முதல்வர் தொடங்கி வைப்பு!!

Must Read

தமிழகத்தில் “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” என்ற பொருட்களை வாங்கும் புதிய முறையினை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

புதிய முறை:

நாட்டில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து மத்திய அரசு “ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மூலமாக எந்த மாநிலத்தை சேர்த்தவரானாலும், எந்த மாநிலத்திலும் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்களை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் “பாயிண்ட் ஆப் சேல்” இயந்திரத்திற்கு மாற்றாக “பயோமெட்ரிக்” இயந்திரம் கொண்டு வரப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் ஸ்மார்ட் கார்டு அட்டைதாரர் தனது கை ரேகையை பதிவு செய்து பொருட்களை பெற்று கொள்ளலாம். இந்த முறையால் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் அதிகமாக பயனடைவர். ஆனால், முதியவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அனைவரும் சற்று சிரமம் அடைவர். ஆனாலும், இந்த திட்டம் இன்று முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது. தமிழகத்தில் முன்னதாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது.

32 மாவட்டங்களில் இன்று முதல் செயல்பாடு:

தற்போது தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் இந்த இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்றது. கூடுதலாக, இந்த இயந்திரங்களை பயன்படுத்த விற்பனையாளர்களுக்கு 2 நாள் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இன்று முதல் மக்கள் தங்கள் கை ரேகையை பதிவு செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

இன்று உலக காபி தினம் – இந்த ராசிக்காரர்கள் காபிக்காக சொத்தையே எழுதி தருவார்களாம்!!

இந்த திட்டத்தினை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், விருதுநகர், மதுரை, திருவண்ணாமலை இந்த 6 மாவட்டங்களில் வரும் 16 ஆம் தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

1 COMMENT

  1. இருக்கிற புள்ளக்கே சொத்துக்கு வழிய காணோமாம்
    இதுல தத்து புள்ள வேற.
    Local அட்டைதாரர்களுக்கு பொருட்கள் கொடுக்க யோகிதை இல்லை
    இனிமேல் தினமும் salesman கூட சண்டைதான்
    பாவம் சேல்ஸ்மேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -