தமிழகத்தில் இந்த இடங்களில் ட்ரோன் பறக்கத் தடை.. மீறினால் நடவடிக்கை பாயும்!!

0
தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும், கடந்த ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் சிசிடிவி இணைக்கப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் வரும் ஜூன் 4-ஆம் தேதி வரை ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் லயோலா, ராணிமேரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் ட்ரோன்களை பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here