புரட்டாசி ஸ்பெஷல் – தலப்பாக்கட்டி ஸ்டைலில் வெஜிடபிள் பிரியாணி!!

0
vegitable biriyani
vegitable biriyani

இப்பொழுது உள்ள காலத்தில் உணவு வகைகளில் பிரியாணிக்கு மவுசு அதிகம். அந்த அளவிற்கு பிரியாணி பிரியர்கள் உள்ளன. தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பலரும் அசைவ உணவுகளை சாப்பிட முடியாமல் தவித்து வருகின்றனர். அதனால் தலப்பாக்கட்டி சுவையில் அருமையான வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • அரிசி – 3 கப்
  • சின்ன வெங்காயம் – 250 கி
  • பூண்டு – 100 கி
  • இஞ்சி சிறிது
  • பச்சை மிளகாய் – 6
  • முந்திரி – 100 கிராம்
  • பட்டை
  • கிராம்பு
  • பிரியாணி இலை
  • மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – ஒரு தேக்கரண்டி
  • கறிமசால் தூள் – ஒரு தேக்கரண்டி
  • கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
  • கேரட் – 100 கிராம்
  • பீன்ஸ் – 100 கிராம்
  • காலிஃபிளவர் – 1
  • பட்டாணி – 100 கிராம்

செய்முறை

முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் போன்றவற்றை கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு முந்திரி பருப்பு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, அண்ணாச்சி பூ, கறிமசாலா தூள் போன்றவற்றை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

vegetable biriyani
vegetable biriyani

இப்பொழுது ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, பிரியாணி இலை போன்றவற்றை சேர்த்து அதன் பின் தக்காளியை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வைத்திருந்த விழுதை அதில் சேர்த்து நன்கு அடிபிடிக்காமல் வதக்கவும்.

Restaurant-Style-Vegetable-Biryani-Recipe-Step-4
Restaurant-Style-Vegetable-Biryani-Recipe-Step-4

அதன் பின் அரைத்து வைத்த பட்டை கிராம்பு மசாலாவை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.  இப்பொழுது சிறிது எண்ணெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும். அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். இப்பொழுது நன்கு வதங்கியதும் ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.

Vegetable-Biryani
Vegetable-Biryani

கொதி வந்ததும் ஊறவைத்திருந்த அரிசியை அதில் சேர்த்து கிளறி மிதமான சூட்டில் மூடி வைக்கவும். அரிசி முக்கால் பதம் நன்கு வெந்ததும் அதில் நெய் ஊற்றி கிளறி 15 நிமிடம் தம் கட்டி இறக்கி பரிமாறினால் தலப்பாக்கட்டி சுவையில் கலக்கலான வெஜிடபிள் பிரியாணி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here