ஐபிஎல் 2020: KXIP vs MI – 2வது வெற்றியை பெறப்போகும் அணி எது??

0

ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அபுதாபியின் ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐபிஎல் 2020 இன் 13 வது போட்டியில் கே.எல்.ராகுலின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முந்தைய போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி என சமநிலையில் இருப்பதால் 2வது வெற்றியை கைப்பற்றி புள்ளிப்பட்டியலில் முன்னேற அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டி இருக்கும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இரு அணிகளும் பேட்டிங் பிரிவில் அசுர பலத்தை கொண்டுள்ளன. கே.எல்.ஐ. ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் தொடர்ந்து அரைசதம் அடித்து அசத்தி வருகின்றனர். மும்பையில் ரோஹித், கீரோன் பொல்லார்ட் மற்றும் இஷான் கிஷன் போன்றவர்கள் நல்ல பார்மில் உள்ளது அணிக்கு பலத்தை அதிகரிக்கும். இருப்பினும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவது பலவீனமாகும்.

போடு, போடு அதெல்லாம் அடிக்க மாட்டான் – ராஜஸ்தானை திட்டமிட்டு வீழ்த்திய தினேஷ் கார்த்திக்!!

KXIP vs MI உத்தேச 11 அணி:

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் (கேப்டன்&கீப்பர்), நிக்கோலஸ் பூரன், க்ளென் மேக்ஸ்வெல், கருண் நாயர், சர்பராஸ் கான், ஜேம்ஸ் நீஷம், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, முஜீப் உர் ரஹ்மான்

மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி கோக் (கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்டிக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், கிருனல் பாண்ட்யா, ராகுல் சாஹர், ஜேம்ஸ் பாட்டின்சன், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரீத் பும்ரா.

KXIP vs MI அணிகள் இதுவரை 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் மும்பை இந்தியன்ஸ் 13 போட்டிகளிலும், பஞ்சாப் 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் பேட்டிங்கில் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் பல சிக்ஸர்கள் பறக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here