சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு.. விசாரணை கைதி தற்கொலை.. முழு விவரம் உள்ளே!!

0
சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு.. விசாரணை கைதி தற்கொலை.. முழு விவரம் உள்ளே!!

இந்தியில் மிகவும் பாப்புலர் ஆன முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் சல்மான் கான். இந்நிலையில் அவரின் வீட்டின் முன் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார், குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் பதுங்கியிருந்த விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இந்நிலையில் மும்பை சிறப்புப் பிரிவு போலீசாரின் விசாரணைக் காவலில் இருந்த கைதி அனுஷ் தபன் (23 வயது) இன்று தற்கொலை செய்து கொண்டார். இவர் சிறையில் உள்ள கழிவறையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதை அடுத்து அவரை மீட்ட போலீசார், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

விருதுநகர் அருகே வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள்., முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here