தமிழக பள்ளி மாணவர்களே.., கோடை  விடுமுறை  நீடிப்பா?? வெளிவந்த முக்கிய தகவல்!!

0
தமிழக பள்ளி மாணவர்களே கோடை  விடுமுறை  நீடிப்பா??
தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு  கோடை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதனிடையே முன்பு இல்லாத  விதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால்  மக்கள்  அவதிக்குள்ளாகும்  நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்துள்ளதால் வெளியில்  தலைகாட்ட கூட முடியாத  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  பள்ளி  விடுமுறை குறித்த  முக்கிய  தகவல் ஒன்று கசிந்துளளது.
அதாவது, கடந்த வருடமும்  வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பள்ளிகளின்  விடுமுறை  நீடிக்கப்பட்டிருந்தது. அதே போல வெயிலின்  தாக்கம்  தொடர்ந்தால்  இந்த  வருடமும் பள்ளி மாணவர்களின்  விடுமுறை காலம்  நீடிக்கப்பட  வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.  ஆனால்  இதுகுறித்த அதிகாரபூர்வ  தகவல் இன்னும்  வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here