Thursday, May 2, 2024

‘மாஸ்டர்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு – ரசிகர்கள் குஷி!!

Must Read

பல வித எதிர்பார்ப்புகளுடன் விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் படம் “மாஸ்டர்” அந்த படம் கண்டிப்பாக ஓடிடி தளத்தில் வெளிவராது என்று படக்குழுவினர் கூறியுள்ள நிலையில் தற்போது படம் வெளியாகவுள்ள தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

“மாஸ்டர்” ரிலீஸ்:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், தனது படங்களின் மூலமாக வசூல் சாதனை படைத்தது வரும் நடிகர் விஜய், வருடத்திற்கு ஒன்றிரண்டு படத்தில் மட்டுமே நடித்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவர இருந்த படம் “மாஸ்டர்”. இந்த படத்தை “கைதி” படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோஹனன் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படம் கொரோனா பொது முடக்கம் காரணமாக வெளியிடப்படாமல் இருந்தது. இதனை அடுத்து பல மாதங்கள் பொது முடக்கம் நீடித்ததால் தமிழில் உருவான சில படங்கள் ஓடிடி என்று சொல்லப்படும் ஆன்லைனில் ரிலீஸ் ஆனது. சமீபத்தில் கூட திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்புகளையும் மீறி நடிகர் சூர்யா தனது “சூரரை போற்று” திரைப்படத்தை வெளியிட்டார்.

இனி பிகினி ஷூட் கிடையாது, ஓப்பனாக கூறிய சமந்தா – சோகத்தில் ரசிகர்கள்!!

இதனால் விஜயின் “மாஸ்டர்” படமும் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. தொடர்ச்சியாக, இது போன்ற செய்திகள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த செய்தியினை “மாஸ்டர்” படத்தின் குழுவினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அதே போல் விஜயின் “மாஸ்டர்” படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்றும் கூறியிருந்தனர். தற்போது புதிய அப்டேட்டாக “மாஸ்டர்” படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சந்தோச களிப்பில் உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -