‘5 பைசாவுக்கு, 1 கிலோ கோழிக்கறி’ – உசிலம்பட்டியில் அலைமோதிய மக்கள் கூட்டம்!!

0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட இறைச்சி கடையில் அறிமுக சலுகையாக 5 பைசா நாணயத்திற்கு 1 கிலோ கோழிக்கறி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் சுற்றுவட்டாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.

5 பைசாவுக்கு கோழிக்கறி:

புதிதாக உணவகம் தொடங்குபவர்கள் குறைந்த விலைக்கு பிரியாணி வழங்கும் காலம் மாறி, தற்போது புழக்கத்தில் இல்லாத 5 பைசா, 10 பைசா நாணயங்களுக்கு உணவு வழங்குவதாக விளம்பரம் செய்கின்றனர். அக்காலத்து நாணயங்களை தற்போது வரை பத்திரமாக வைத்திருப்பவர்களுக்கு இது பெரிய ஜாக்பாட் தான். சமீபத்தில் கூட சென்னையில் 10 பைசாவிற்கு பிரியாணி விற்றதால், கொரோனா அச்சத்தையும் தாண்டி மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது அது போன்ற சம்பவம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றுள்ளது. பேரையூர் ரோட்டில் தனியார் இறைச்சிக்கடை ஒன்று புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. திறப்புவிழா சலுகையாக ஒரு கிலோ கோழிக்கறி 5 பைசாவுக்கு விற்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தில் போஸ்டரை பார்த்த மக்கள் 5 பைசாவுடன் கடைக்கு கிளம்பி விட்டனர். இன்று திருக்கார்த்திகை என்பதால் பல கறிக்கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் உசிலம்பட்டியில் 5 பைசா கறிக்கடைக்கு மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் கடையின் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். விளைவு, போக்குவரத்து நெரிசல். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். இக்காலத்தில் 5 பைசா நாணயம் அதிகமாக யாரிடமும் இருக்காது என நினைத்த கடை முதலாளியே கூட்டத்தை பார்த்து வாய் அடைத்து போனார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் இன்றி இவ்வாறு சலுகைகளை அறிவிக்கும் கடைகள், வைரஸ் பரவுவதற்கு முக்கிய ஸ்பாட் ஆக உள்ளன. இதனால் தமிழகத்தில் 2வது அலை கொரோனா பரவல் தொடங்கி விடுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here