Sunday, April 28, 2024

‘அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டிங்க போல’ – வனிதாவை கலாய்த்த ரசிகர்கள்!!

Must Read

சமூகவலைத்தளங்களில் எப்போதுமே பரபரப்பை உருவாக்குபவர், நடிகை வனிதா விஜயகுமார். தற்போது ரசிகர்கள் “என்ன வனிதா அக்கா அடுத்த கல்யாணத்துக்கு தயாரா?” என்று கேட்டு கலாய்க்கும் அளவிற்கு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகை வனிதா விஜயகுமார்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர், விஜயகுமார். அதே போல் அவரது மனைவி மஞ்சுளாவும் மிகவும் பிரபலமான நடிகை. இவர்களது மகள் தான் வனிதா விஜயகுமார். வனிதாவும் சில படங்களில் நடித்துள்ளார். பின், தான், தன் குடும்பம் என்று சென்று விட்டார். பல வருடங்களுக்கு பிறகு அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரி-என்ட்ரி கொடுத்தார். அப்போது அவரது அடாவடி பேச்சு மற்றும் செயல்கள் காரணமாக பரவலாக பேசப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான அவர் பொது முடக்கத்தின் போது சமையல் செய்யும் விடீயோக்களை யூடியூபில் பதிவிட்டு பலரையும் கவர்ந்து வந்தார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதற்கு பின்பாக, விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இப்படியாக இருக்க தன்னுடன் பணிபுரிந்த பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பலரும் திருமண செய்ய வேண்டாம் என்று அவரிடம் கூறினர். ஆனால், யாருடைய பேச்சினையும் கேட்காத வனிதா அவரை திருமணம் செய்து கொண்டார்.

‘மாஸ்டர்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு – ரசிகர்கள் குஷி!!

திருமணம் முடிந்து 6 மாதங்கள் கூட முடியாத நிலையில் பீட்டர் பால் அதிகமாக குடிப்பதாக கூறி அவரை விட்டு பிரிந்துள்ளார். ஆனால், பீட்டர் பாலை விட்டு பிரிந்த சோகம் கொஞ்சம் கூட இல்லாமல் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.

தற்போது தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சட்டிஸ்கர் சென்றுள்ள அவர் பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். கூடுதலாக, பல வண்ணங்களில் ஹேர் கலரிங் செய்தும் உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த புகைப்படங்களில் கேப்ஷனாக “இந்த விழா காலத்தில் என் வாழ்வில் அதிகமான வண்ணங்களை சேர்க்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘வனிதா அக்கா அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டிங்க போல??’ என்று கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -