இனி ATM இல் பணம் எடுக்க OTP தேவை – பிரபல வங்கி முக்கிய அறிவிப்பு!!

0

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஓடிபி அடிப்படையில் ATM இல் பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி டிசம்பர் 1 தேதி முதல் OTP இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணத்தை எடுக்க முடியும்.

ATM இல் OTP:

சமீபத்திய காலங்களில், போலி ATM கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் பணம் திருடப்படுவதாக பல புகார்கள் எழுந்தன. இதனால் ஏடிஎம்கள் வழியாக நடக்கும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க, பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ஓடிபி அடிப்படையில் பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தப் போகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ரூ.10,000/ – க்கு மேல் பணத்தை ATM மூலம் எடுக்க OTP கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், வாடிக்கையாளர்களின் பணம் ATM வாயிலாக திருடப்படுவது தடுக்கப்படும். வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகைக்கு மேல் தங்கள் கணக்கில் இருந்து ATM மூலமாக பணத்தை எடுக்க, தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும் OTP எண்ணை உள்ளிட வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க தற்போதைய செயல்பாட்டில் எந்த பெரிய கட்டுப்பாடும் தேவையில்லை. ஆனால் இது ATM பரிவர்த்தனையை மிகவும் பாதுகாப்பாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here