Wednesday, April 24, 2024

Ram poct24

குடியுரிமை சட்ட திருத்த மசோதா – முழு விளக்கம்

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற சமயப் பிரிவினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 09 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தினார். ஆதரவும் எதிர்ப்பும்: மக்களவையில் இச்சட்டத் திருத்தத்திற்கு ஆதராவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்ததால் இச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.  மாநிலங்களவையில் இச்சட்டத் திருத்த மசோதா 11 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது, மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்ததால் சட்ட திருத்த...

தமிழக விவசாயிக்கு விருது – பிரதமர் மோடி வழங்கினார்

கர்நாடகா மாநிலம் தும்கூரில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டாரம், சீராப்பள்ளி கிராமம், குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பாப்பாத்தி க/பெ. பொன்னுசாமி அவர்களுக்கு 2017-2018 ம் ஆண்டில் எள் பயிரில் அதிக மகசூல் எடுத்த காரணத்திற்காக பாராட்டு தெரிவித்தார். மேலும் அவருக்கு நமது பிரதமர்...

ஜன. 6ல் பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் ஜனவரி 6ம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகள் ஜனவரி 3 அதாவது இன்று திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் மீண்டும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டதை...

பார்வையில்லாதவர்கள் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண புதிய செயலி – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் மொத்தம் 80 லட்சம் பேர் பார்வை குறைபாடு உடையவர்கள் ஆக உள்ளனர்.  இவர்கள் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை கண்டுபுடிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.  இதனை எளிமையாக்க ரிசர்வ் வங்கி புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலிக்கு ''மொபைல் எய்டட் நோட் ஐடன்டிபையர்'' எனவும் இது சுருக்கமாக 'மனி' என்று அழைக்கப்படுகிறது.  இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அவரவர் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதனை இன்டெர்னட் வசதி இல்லாத இடங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் செயல்பாடு: ரூபாய் நோட்டை...

ஊராட்சி மன்றத் தலைவராக கல்லூரி மாணவி தேர்வு

தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இம்மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்; 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள்; 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள்; 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் பதவி என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிச. 27,...

ஜன. 1 முதல் ரயில் பயணியர் புகார் தெரிவிக்க புதிய எண்கள்

இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக சேவைகளைப் பெறவும் மற்றும் புகார்கள் தெரிவிக்கவும் கீழ்கண்ட எண்களை பயன்படுத்தி வருகிறது. ரயில்வே தொடர்பான தகவல்களுக்கு   - 131, 139 கேட்டரிங் சேவை குறைபாட்டுக்கு          - 1800 11 1321 விபத்துகள் தொடர்பாக                             - 1072 பொது புகார்களுக்கு                                 - 138 கண்காணிப்புக்கு                                     - 152210 ரயில் பெட்டிகள்...

WhatsApp users shared Record Number of Messages on This New Year

WhatsApp Messenger is a freeware, cross-platform messaging and Voice over IP (VoIP) service owned by Facebook.  It allows users to send text messages and voice messages,  make voice and video calls, and share images, documents, user locations, and other media.  WhatsApp's client...

புத்தாண்டு மது விற்பனையில் தமிழகம் புது மைல்கல்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள, 'டாஸ்மாக்' கடைகளில், 2019 டிசம்பர், 31ல் மட்டும், 150 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.  இது, 2018 டிசம்பர், 31ல், 130 கோடி ரூபாயாக இருந்தது. இந்த வருடம் ஆங்கில புத்தாண்டு மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  தமிழகத்தில், அரசு நிறுவனமான, 'டாஸ்மாக்' சில்லறை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. இவற்றில், தினமும், 80 கோடி ரூபாய்; வார மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மது வகைகள் விற்பனையாகின்றன. இம்முறை தமிழகத்தில் பலரும், மது விருந்துடன் புத்தாண்டு பிறப்பை வரவேற்றனர்.  இதனால் டிச. 31ம் தேதி மதியம் முதல் இரவு, 10:00 மணி வரை, டாஸ்மாக் கடைகளில், கூட்டம் அலைமோதியது.  இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர்...

பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்தது – தேமுதிக

தமிழக அரசியல் களத்தில் காணாமல் போய்விட்டதாக கருதப்பட்ட தேமுதிக தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமது செல்வாக்கை நிரூபித்திள்ளது.  மொத்தம் 82 இடங்களில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியை கைப்பற்றி தனது இருப்பை பதிவு செய்தது. ஆரம்ப காலத்தில் கூட்டணி அமைத்து விஸ்வரூப வெற்றி பெற்று எதிர்கட்சியாக இருந்த தேமுதிக பின்னர் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்தது.  அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் தமிழக தேர்தல் களத்தில் தேமுதிக காணாமல் போய்விட்டதாகவே கருதப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை பல இடங்களில் முடிவடைந்துள்ளளது.  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகார அறிவிப்பின் படி தேமுதிக மொத்தம் 82 இடங்களில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களில் 330 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களை தேமுதிக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது திமுக, அதிமுகவை தொடர்ந்து காங்கிரஸ் 88 இடங்களைப் பெற்ற நிலையில் தேமுதிக 4-வது இடத்தை பெற்றிருக்கிறது. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 2 இடங்களில் தேமுதிக வென்றுள்ளது. 

2010 – 2019 பத்தாண்டுகள் ஒரு பார்வை

இத்தொகுப்பில் 2010 முதல் 2019 வரை நடைபெற்ற  உலகின் மறக்க முடியாத நிகழ்வுகளையும், தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், அறிவியல் அற்புதங்களையும் காண்போம். 2010 - 2019 இடைப்பட்ட ஆண்டானது பலருக்கு சிறப்பான ஆண்டாகவும்,  சிலருக்கு கடினமானதாகவும் அமைந்தது.  இப்பத்தாண்டுகளில் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அளப்பரியது.  அனைத்து விதமான செயல்கள், நிகழ்வுகள் விரல் நுனியில் வந்துவிட்டன ஸ்மார்ட்போன் வழியாக.  எவ்வாறாக இருப்பினும் இப்புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள். 2010 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்:      1.  இன்ஸ்டாகிராம், ஓலா, உபர் துவங்கப்பட்டது, வாட்ஸ் அப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.      2.   சர்வதேச சந்தைக்கு அறிமுகமானது நெட் ஃபிளிக்ஸ்.      3.  ஆப்பிள் சிஇஓ ஸ்டீவ் ஜாப்ஸ் உலகின் முதல் ஐபாட்டை அறிமுகம் செய்தார்.      5.  உலகின் ஹிட் ஆல்பத்தை தந்தார் 16 வயது ஜஸ்டின் பைபர்.      6.  முன்னாள் பெங்கால் முதல்வர் ஜோதிபாசு அவர்கள் காலமானார். 2011 ம் ஆண்டின் முக்கிய...

About Me

1289 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -spot_img