பார்வையில்லாதவர்கள் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண புதிய செயலி – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

0
பார்வையில்லாதவர்கள் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண புதிய செயலி - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் மொத்தம் 80 லட்சம் பேர் பார்வை குறைபாடு உடையவர்கள் ஆக உள்ளனர்.  இவர்கள் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை கண்டுபுடிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.  இதனை எளிமையாக்க ரிசர்வ் வங்கி புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலிக்கு ”மொபைல் எய்டட் நோட் ஐடன்டிபையர்” எனவும் இது சுருக்கமாக ‘மனி’ என்று அழைக்கப்படுகிறது.  இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அவரவர் ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  இதனை இன்டெர்னட் வசதி இல்லாத இடங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் செயல்பாடு:

ரூபாய் நோட்டை ஸ்மார்ட் போன் கேமரா மூலம் இந்த செயலியின் உதவியுடன் ஸ்கேன் செய்தால் அந்த ரூபாய் நோட்டின் மதிப்பினை ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் சவுண்ட் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.ஆனால் இதனை பயன்படுத்திக் கள்ள ரூபாய் நோட்டுக்களை கண்டறிய முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here