அப்படி போடு.., அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்  ரீ-ரிலீஸ்.. என்னைக்கு தெரியுமா??

0

இன்றைய சினிமாவில் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பில்லா, வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன, கில்லி படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பில்லா படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் இன்னொரு சூப்பர் ஹிட் திரைப்படம் மறுஒளிபரப்புக்கு தயாராகி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC குரூப் 4 முக்கிய வினா.., இன்று திங்கள் கிழமை, 61 நாள் கழித்து என்ன கிழமை வரும்?? விடை உள்ளே!!

அதாவது அஜித் வில்லன் வேடத்தில் அசத்தி கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வரும் மே மாதம் 1ம் தேதி ரீ- ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here