Tuesday, April 30, 2024

Ram poct24

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை

தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இம்மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்; 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள்; 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள்; 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் பதவி என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிச. 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீதம், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.  அனைத்து வாக்காளர்களும் ஊராட்சி கவுன்சிலர்,  ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகியோரை தேர்வு செய்ய நான்கு ஓட்டுகளை பதிவு செய்தனர்.  கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன. மற்ற பகுதிகளில் நான்கு வண்ண ஓட்டுச் சீட்டுகள் பயன் படுத்தப்பட்டன.ஓட்டுப் பெட்டிகள்  'சீல்'  வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப் பட்டன. பதிவான ஓட்டுகள் 315 மையங்களில் இன்று (ஜன.,2) எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டுப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னிலை நிலவரம்:  மாவட்ட கவுன்சிலர் -  அதிமுக - 95                                                 திமுக - 115                                                 காங் -...

இந்த நடப்பாண்டில் 7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

இந்த புத்தாண்டு முதல் தனியார் நிறுவனங்கள் 7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வாய்ப்பு உள்ளதாகவும், நடப்பாண்டில் சம்பள உயர்வு 8 சதவீதம் ஆக இருக்கும் என்றும் ''மை ஹயரிங்கிளப் டாட் காம்  அண்ட் சர்காரி நாகுரி இன்போ எம்பிளாய்மென்ட் ட்ரெண்ட் சர்வே - 2020'' ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு: இந்த ஆய்வானது 42 முக்கிய நகரங்களில், 12 தொழில் துறைகளில் உள்ள 4,278 நிறுவனங்களில் எடுக்கப்பட்டது.  இதன் மூலம் இந்த ஆண்டில் 7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்கு அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னணி நகரங்களான சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதெராபாத், புனே, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் 5.15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இதர வேலைவாய்ப்புகள் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் ஏற்படுத்தப்படும்.  நாட்டின் வடமண்டலத்தில் 1.96 லட்சம் வேலைவாய்ப்புகளும், தென் மண்டலத்தில் 2.15 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டில் சம்பளம், போனஸ் போன்றவற்றின் உயர்வு ஒற்றை இலக்கத்தில் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், ஒட்டுமொத்த ஊதிய உயர்வு 8 சதவீதம் ஆக இருக்கும் எனவும் சர்வே மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டில் 6.2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் 5.9 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டது ஆகிய விபரங்கள் இவ்வாய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்னோ மாணவர் சேர்க்கை – கால அவகாசம் நீட்டிப்பு

இக்னோ தொலைநிலையில் பட்டம், சான்றிதழ், பட்டயப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்காக 2020 ஜனவரி மாணவர் சேர்க்கைக்கு www.ignou.ac.in என்ற ஆன்லைன் மூலம் விண்ணப்பிதற்கான தேதி ஜன. 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் சான்றிதழ், இளநிலை மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்து கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு பெறலாம்.  மேலும் விலக்கு கோருவோர் பணிபுரிபவராக இருத்தல் கூடாது.   இவ்வாறு இக்னோ மதுரை மண்டல மைய இயக்குனர் ஷர்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு...

Wisden’s T20I Team of the Decade – Only Two Indian Players

John Wisden was an English Cricketer who played 187 First-Class Cricket matches for Three English Country Cricket Teams.  The Teams are Kent, Middlesex and Sussex. He is now best known for launching the eponymous Wisden Cricketer’s Almanack in 1864, the year after he retired from First-Class Cricket.  He was born on 5 September 1826. Wisden...

TRAI’s Reduced NCF Charges -Revised DTH and Cable TV Frame Work

The Telecom Regulatory Authority of India (TRAI) has reduced the Maximum NCF charges to Rs. 130 (Excluding Taxes) for 200 Channels.  TRAI on Wednesday made amendments to the new regulatory frame work for Cable and Broadcasting services under which cable TV users will...

அண்ணா பல்கலைகழகம் – தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு தடை

அண்ணா பல்கலைகழகம் மணிக் கணக்கு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்களை வரவேற்று  விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த தற்காலிக ஆசிரியர் அருட்பெருஞ்சோதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விபரம் பின்வருமாறு: அண்ணா பல்கலையின் கூடுதல் பதிவாளர் டிச. 19 2019 அன்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில் அண்ணா பல்கலையில் மணிக் கணக்கு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களாக 518 பேர் பணியாற்றி வருகின்றனர்.  தற்காலிக ஆசிரியர்கள்...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !!!

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.  அவ்வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர்  2 ஆம்...

அண்ணா பல்கலையில் பருவ தேர்வு ஜன. 4 முதல் தொடக்கம்

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு அரசு விடுமுறைகள் ஆகிய காரணங்களுக்குகாக கல்லூரி மற்றும் பல்கலைகளுக்கு விடுமுறை அளித்தது உயர்கல்வி துறை. இதைத் தொடர்ந்து கல்லூரி விடுதிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் பல்கலைகளில் டிச. 21 முதல் நடைபெறவிருந்த பருவ தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. தற்போது விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரி திரும்பியதை தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் ஜன.4 முதல் தொடங்கும் எனவும் பழைய அட்டவணையில் உள்ள தேர்வுகளுக்கு ஜன.10 வரையும் தேதி நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வில் பங்கேற்க மாணவர்கள் முன்கூட்டியே தங்களை தயார் படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளின் திறப்பு எப்போது???

தமிழகத்தில் கிறிஸ்துமசுக்கு முன்பு, அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, ஜனவரி 23ம் தேதியில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஜனவரி 3ம் தேதி, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. ஊரக உள்ளாட்சி  தேர்தல் பணியில் ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 25 முதல் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில்  அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு ஜனவரி 3 இல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதற்கு பதிலாக...

தேசிய அளவில் கும்பகோணம் பள்ளிக்கு முதலிடம்

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் நடைபெற்ற 6-வது  ஊரக விளையாட்டு போட்டியில் ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழ்நாடு  மற்றும் பல  மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கபடி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கும்பகோணம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற அணியைச் சேர்ந்த மாணவிகளின் விபரம் பின்வருமாறு: கும்போகோணம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்:      காஞ்சனா, தரணி, ஆர்த்தி தேவனாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள்:       ப்ரீத்தா, கிரிஜாதேவி, ஜெயஸ்ரீ கும்பகோணம் தூயவளனார் மேல்நிலைப் பள்ளி மாணவி:      ஜீவா திருப்புறம்பியம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி:      ஆஷா திருப்பனந்தாள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி:      சுகாசினி ஆகிய வீராங்கனைகளை உள்ளடக்கிய தமிழக அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றி நம் மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநில துணைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் வெற்றி பெற்று வீடு திரும்பிய மாணவிகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் ஆகிய யு.அசோக், எஸ்.சூர்யா, வி.சுந்தர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்.

About Me

1295 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img