நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !!!

0

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. 

அவ்வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர்  2 ஆம் தேதி தொடங்கியது. 

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இணையதள முடக்கத்தால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் கடும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் (31.12.2019) இரவு (11.59) மணிக்கு நிறைவு பெறவிருந்த நிலையில், ஜனவரி 6- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: www.nta.ac.in, ntaneet.nic.in அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here