கெஜ்ரிவால் உதவியாளர் கைது: பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் ஆம் ஆத்மி., வெளியான அறிவிப்பு!!!

0

கடந்த 13ஆம் தேதி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், தன்னை தாக்கியதாக பெண் எம்.பி.ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (மே 16) டெல்லி போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததன் பேரில், கெஜ்ரிவாலின் வீட்டில் இருந்த உதவியாளர் பிபவ் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு., நடுவானில் தத்தளித்த பயணிகள்? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

அதன்படி ‘ஆம் ஆத்மி கட்சியை அழிக்க வேண்டும் என்பதற்காக கட்சித் தலைவர்களை கைது செய்த பிரதமர் மோடி, தற்போது எனது உதவியாளரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். எனவே ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர், நாளை மதியம் 12 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். முடிந்தால் அனைவரையும் பிரதமர் சிறையில் அடைக்கட்டும்.’ என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here