தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை

0

தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இம்மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்; 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள்; 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள்; 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் பதவி என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிச. 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீதம், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.  அனைத்து வாக்காளர்களும் ஊராட்சி கவுன்சிலர்,  ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகியோரை தேர்வு செய்ய நான்கு ஓட்டுகளை பதிவு செய்தனர்.  கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன. மற்ற பகுதிகளில் நான்கு வண்ண ஓட்டுச் சீட்டுகள் பயன் படுத்தப்பட்டன.ஓட்டுப் பெட்டிகள்  ‘சீல்’  வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப் பட்டன.

பதிவான ஓட்டுகள் 315 மையங்களில் இன்று (ஜன.,2) எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டுப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னிலை நிலவரம்:

 மாவட்ட கவுன்சிலர் –  அதிமுக – 95

                                                திமுக – 115

                                                காங் – 5

                                                 பாஜக – 3

                                                 பாமக – 7

                                                 கம்யூனிஸ்ட் – 7

ஒன்றிய கவுன்சிலர் –     அதிமுக – 324

                                                  திமுக – 309

                                                  காங் – 13

                                                   பாஜக – 9

                                                   பாமக – 14

                                                   கம்யூனிஸ்ட் – 12

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here